உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு உண்டியலை வீசி சென்ற திருடர்கள்

கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு உண்டியலை வீசி சென்ற திருடர்கள்

புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே தாசம்பாளையத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. பூசாரி நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.தகவலறிந்து மக்களும் திரண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணவில்லை. புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் மக்கள் தேடியபோது, அருகே உள்ள விவசாய நிலத்தில் உண்டியல் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. காணிக்கை பணத்தை எடுத்துக் கொண்டு போட்டு சென்றுள்ளனர்.முன்னதாக கணக்கரசம்பாளையத்தில் முனியப்பன் கோவில் பூட்டை உடைத்து, வேலை திருடி சென்றுள்ளனர். இரு கோவில்களிலும் சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பலா, வேறு நபர்களா என புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்