உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை

உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை

பவானி: ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி புதுாரை சேர்ந்தவர் ரம்யா, 23; கூலி தொழிலாளி. தாய், தம்பியுடன் வசிக்கிறார். ஒரிச்சேரி, காட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி லோகேஷ், 27; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தந்தை வழி உறவு முறையில் அண்ணன் என்பது தெரிய வந்தது. இதனால் லோகேசுடன் பேசுவதை ரம்யா நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், ரம்யா வீட்டில் தனியாக இருந்தபோது சென்றுள்ளார். தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். அவர் சத்தமிடவே லோகேஷ் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடியுள்ளார். ரம்யா புகாரின் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் லோகேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை