உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த திண்டல் வேளாளர் மெட்ரிக்

10ம் வகுப்பு தேர்வில் சாதித்த திண்டல் வேளாளர் மெட்ரிக்

ஈரோடு: ஈரோடு, திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, 216 மாணவியரும் முதல் வகுப்பில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.மாணவி கல்பனா, 497 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முத-லிமும், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார். மாணவி ஹேம-மித்ரா, 495 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி மிதுனா, ௪93 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பெற்றனர். அறிவியல் பாடத்தில், 13 மாணவியர், சமூக அறிவியலில், 13 மாணவியரும், கணித பாடத்தில் ஒரு மாணவியும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.சாதனை படைத்த மாணவியரை, பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் ரத்தினசாமி, இணை செயலர் ராஜமாணிக்கம், இயக்குநர் குலசேகரன், நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், யுவராஜா, முதல்வர் செல்வி லதா, நிர்வாக அலுவலர் சென்னியப்பன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை