ரயில்வே பாலத்தை சீரமைத்த பேரூராட்சி கவுன்சிலர்கள்
சென்னிமலை 'சென்னிமலை - ஊத்துக்குளி பகுதியை இணைக்கும் சிறு ரயில்வே பாலம் உள்ளது. பைக், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் இதன் வழியே செல்கின்றன. இந்த பாலம் இல்லாவிட்டால், சென்னிமலையில் இருந்து திருப்பூருக்கு, பெருந்துறை, காங்கேயம் சென்று சுற்றி செல்ல வேண்டும். ரயில்வே நுழைவு பாலத்தில் கான்கிரீட் தளம் சேதமடைந்ததால், பைக், கார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் களமிறங்கினர். நான்கு மணி நேரத்தில் சீரமைத்த நிலையில், வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்கின்றனர்.