கட்டட கழிவு கொட்ட வந்த டிராக்டர் சிறைபிடிப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்-பட்டி, இந்திரா நகரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்-கின்றனர். இப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் (பாறை குழி) உள்ளது. இதில் கட்டட கழிவு, மருத்துவ மற்றும் இறைச்சி கழிவு கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் சுகா-தாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கட்டட கழிவுகளை கொட்ட ஒரு டிராக்டர் வந்தது. அப்பகுதி மக்கள், வார்டு கவுன்-சிலர் குமரவேலுவுடன் இணைந்து சிறைபிடித்தனர். மாநகராட்சி அலுவலர்கள், வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.போலீசார் விசாரணையில், கட்டட கழிவுகளை கொட்ட வந்தது கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த பிரபு, 45, என்பது தெரிந்-தது. ஈரோடு, சம்பத் நகர் பகுதியில் இருந்து கட்டட கழிவை எடுத்து வந்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற கழிவுகளை டிராக்-டரில் கொண்டு வந்து கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாநகராட்சி அலுவலர்களிடம் டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், மக்கள் அங்கிருந்து சென்றனர்.அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்