உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கைஈரோடு, டிச. 11-ஈரோட்டில் கனிமார்க்கெட் ஜவுளி மார்க்கெட் பகுதியில், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி, மாநகராட்சி கமிஷனர் மணீஷிடம், வியாபாரிகள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த, 2019ல் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் அமைப்பதற்காக, வாரச்சந்தையில் இயங்கி வந்த, 720 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்ட பின், காலியிடத்தில் வாரச்சந்தை மீண்டும் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் உறுதி தந்தது. தற்போது கனிமார்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் தினசரி கடை செயல்பட்டு வருகிறது. ஆனால், வாரச்சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !