உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

ஜவுளி வாரச்சந்தைக்கு அனுமதி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

ஈரோடு, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சக்திவேல், நுார்சேட் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு கனி மார்க்கெட்டில், 720 வாரச்சந்தை கடைகள் செயல்பட்டன. பல்வேறு பகுதி சிறு, குறு வியாபாரிகள், ஜவுளிகளை விற்பனை செய்தனர். கடந்த, 2019 ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியது. அப்போதைய ஆணையர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், 'கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி முடித்து, மீதி இடத்தில் வாரச்சந்தை கடை வைக்க அனுமதி பெற்றுத்தருகிறோம்' என உறுதியளித்தனர்.வணிக வளாக கட்டுமான பணி முடிந்து, தினசரி கடைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, வாரச்சந்தை கடைகளை அமைத்து கொடுக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ