உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் இன்று, நாளை போக்குவரத்தில் மாற்றம்

ஈரோட்டில் இன்று, நாளை போக்குவரத்தில் மாற்றம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்துக்கு இன்று, நாளை தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சங்ககிரி, திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, திண்டல், பெருந்துறை வழியாக கோவை செல்ல வேண்டும்.கோவையில் இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிகோவில் பிரிவில் இருந்து கவுந்தப்பாடி, கிருஷ்ணாபுரம் பிரிவு, அம்மன் ஆர்ட்ஸ் கல்லுாரி, சித்தோடு பாலத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை, லட்சுமி நகர் வழியாக சேலம் செல்ல வேண்டும்.மேட்டூரில் இருந்து வரும் வாகனங்கள் அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, கோபி, குன்னத்துார், பெருமாநல்லுார் வழியாக கோவை செல்ல வேண்டும். காங்கேயத்தில் இருந்து அறச்சலுார் வரும் கன ரக வாகனங்கள் சென்னிமலை வழியாகவும். கந்தசாமிபாளையத்தில் இருந்து ஓடாநிலை வழியாக செல்லும் வாகனங்கள் எலவநத்தம், வடுகப்பட்டி பிரிவு வழியாகவும், வெள்ளோட்டில் இருந்து அறச்சலுார் செல்லும் வாகனங்கள் கள்ளுக்கடை மேடு, மாரியம்மன் கோவில், அவல் பூந்துறை, கனகபுரம் வழியாகவும், எழுமாத்துாரில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் சந்தைகுட்டை, காசிபட்டி வழியாகவும், சென்னிமலை கைகாட்டி வழியாக அறச்சலுார் வரும் வாகனங்கள் மேற்கு தலவுமலை வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி