உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை நேரத்தை குறைக்க ரயில் டிரைவர்கள் தீர்மானம்

வேலை நேரத்தை குறைக்க ரயில் டிரைவர்கள் தீர்மானம்

ஈரோடு:அகில இந்திய ரயில்வே ஓட்டுனர்கள் சங்க மாநாடு ஈரோட்டில் நடந்தது. தென் மண்டல தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மத்திய செயல் தலைவர் மோனி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற செயலாளர் ஜேம்ஸ், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.வேலை நேரத்தை, 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். 48 மணி நேர வார ஓய்வை வழங்க வேண்டும். தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து, மாநாடு நடக்கும் இடத்துக்கு ஊர்வலமாக, கோஷமிட்டபடி வந்தனர். நிறைவில் ஈரோடு கிளை செயலாளர் ரிஜித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை