உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு-பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு-பேரணி

பவானி, உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்கள், கவுன்சிலர்கள் இணைந்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பள்ளி வளாகத்தில் புங்கன், வேப்பமரம் உள்ளிட்ட, 30க்கு மேற்பட்ட மரக்கன்று நட்டனர். * உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், புன்செய்புளியம்பட்டியை அடுத்த காவிலிபாளையம் ஊராட்சி பகுதிகளில் நேற்று மரக்கன்று நடப்பட்டது. பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் தொண்டர்கள், கலந்து கொண்டனர்.* உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பேரணி நடந்தது. தலைமையாசிரியர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அரிமா சங்க தலைவர் அல்ட்ரா தண்டாயுதபாணி துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பதாகை ஏந்தி பங்கேற்றனர்.சூரம்பட்டி போலீசாரின் 'கருணையால்' காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை