உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகவதிபாளையத்தில் இயங்கி வரும் தனியார் ஸ்பின்னிங் மில்லில், வேலையாட்களை சேர்த்து விடும் மேஸ்திரியாக குளித்தலையை சேர்ந்த நல்லகுமார், 36, தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல், அவரது அறையில் துாங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு, 1:00 மணியளவில் இவரது அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நல்லகுமார், அவருடன் தங்கிருந்த நபர்களின், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நான்கு மொபைல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வந்தவர்கள், அந்த நபர்களை துரத்தி பிடித்துள்ளனர். பின், காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணை நடத்தியதில் கரூரை சேர்ந்த அஜித்குமார், 33, நீலகிரியை சேர்ந்த அருண்குமார், 23, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு மொபைல் மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் வந்த மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ