உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவை, சேலம் பஸ்கள் சித்தோட்டுக்குள் வந்து செல்ல வலியுறுத்தல்

கோவை, சேலம் பஸ்கள் சித்தோட்டுக்குள் வந்து செல்ல வலியுறுத்தல்

கோவை, சேலம் பஸ்கள் சித்தோட்டுக்குள் வந்து செல்ல வலியுறுத்தல்ஈரோடு, அக். 12-கோவை - சேலம் செல்லும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள், ஈரோட்டுக்கு வந்து செல்லாது. 11 கி.மீ.,க்கு அப்பால் சித்தோடு நகரம் வழியாக பைபாஸ் சாலையில் சென்றன. அப்போது ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர், பள்ளிபாளையம், கொடுமுடி, கரூர் என பல பகுதிக்கும் செல்வோர் சித்தோட்டில் இறங்கி பஸ் மாறி செல்வார்கள். நேரமும், செலவும் குறைந்தது.சில ஆண்டுக்கு முன், சித்தோடு - கோபி சாலையில், அரை கி.மீ., துாரத்தில், 4 வழிச்சாலை மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் கோவை - சேலம் செல்லும் பஸ்கள், சித்தோட்டுக்குள் செல்லாமல், நான்கு வழிச்சாலை வழியாகவே செல்லும். அச்சாலையிலேயே இறங்கி கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பயணிகளை, சில பஸ்கள் ஏற்றி, இறக்கும். அவர்கள் அங்கிருந்து சித்தோடு வரை நடந்தே வரும் அவலம் தொடர்கிறது. மிகச்சில பஸ்கள் மட்டுமே, சித்தோட்டுக்குள் வருகின்றன.இப்பிரச்னையால் ஈரோடு, கோபி, சத்தி உட்பட பல ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கின்றனர். சமீபமாக கோவை, சேலம் பஸ் ஸ்டாண்டகளில், சித்தோடு பயணிகள் 'ஏற வேண்டாம்' என்ற குரலில் ஒதுக்குவதால், விரக்தி அடைகின்றனர். 4 வழிச்சாலையில் வரும் பஸ்கள், சித்தோடு நகருக்குள் வந்து மீண்டும் பைபாஸ் வழியாக, 4 வழிச்சாலையில் தொடர்வதால் தாமதம் ஏற்படுவதில்லை. முன்பு போல, சித்தோடு நகருக்குள் வந்து விட்டு கோவை - சேலம், சேலம் - கோவை பஸ்கள் செல்ல பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை