உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வேல் வழிபாடு

ஈரோட்டில் வேல் வழிபாடு

ஈரோட்டில் வேல் வழிபாடுஈரோடு, டிச. 11-ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடக்கிறது. சென்னிமலை, சிவன்மலை, பழனி, வட்டமலை, மருதமலை, கைத்தமலை, பச்சமலை என ஏழு கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மங்கள வேல், ஊர்வலமாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த வேல் யாத்திரை ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலுக்கு நேற்று மாலை வந்தது. அங்கு வேலுக்கு பக்தர்கள் மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இதற்கு ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஜெயமணி தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர்கள் பூர்ணிமா, அலமேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கோவில் முன் வள்ளி கும்மி நடனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை