உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொது மயானத்துக்கு சிக்கல் மலை கிராம மக்கள் குமுறல்

பொது மயானத்துக்கு சிக்கல் மலை கிராம மக்கள் குமுறல்

ஈரோடு, தாளவாடி யூனியன் பனக்கள்ளி ஊர் தலைவர் பசுவராஜூ தலைமையிலானோர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பனக்கள்ளி மலைப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறோம். கிராமத்தில் பொது மயானம் உள்ளது. புதைப்பது, எரிப்பது என அனைத்து வழக்கமும் கடைபிடிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் முஸ்லீம் சமூகத்தினர் சேர்ந்து, மயானம் தங்கள் சமூகத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, பிற சமூகத்தினரை அனுமதிக்க மறுக்கின்றனர்.தவிர கிராமத்தினர் பொதுவாக பயன்படுத்தி வந்த நிலத்தையும் அளந்து, அதுவும் தங்களுக்கானது எனக்கூறி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் சமீபமாக இறந்தவர்கள் உடலை சாலையோரங்களில் அடக்கம் செய்கிறோம். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, பொது மயான ஆக்கிரமிப்பை அகற்றி, அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை