உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்ப் வாரிய உறுப்பினர் ஆலோசனை கூட்டம்

வக்ப் வாரிய உறுப்பினர் ஆலோசனை கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாவட்ட வக்ப் வாரியத்தின் கீழ் வரும் பள்ளிவாசல்கள், கப்ருஸ்தான்கள், தர்காக்களின் நிர்வாகிகளுக்கு, வக்ப் சம்மந்தமான கலந்தாய்வு, ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர் வக்கீல் நவாஸ் தலைமையில், கோவை சரக வக்ப் வாரிய கண்காணிப்பாளர் ஹைதர், ஈரோடு வக்ப் வாரிய ஆய்வாளர் ஹசீனா பேகம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. இது குறித்து, வக்ப் வாரிய உறுப்பினர் வக்கீல் நவாஸ் கூறியதாவது: பள்ளிவாசல், தர்காக்கள் போன்றவற்றில் நிர்வாக பிரச்னை, நிலப்பிரச்னை, தேர்தல் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற தடை, சில புரிதல் இல்லாத பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கான தீர்வு குறித்து ஆலோசனை பெறப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுள்ளோம். இவ்வாறு கூறினார்.கொங்கு மண்டல தர்காக்கள் கூட்டமைப்பு கவுரவ தலைவர் முகம்மது அர்ஷத், பாஷா, சத்தியமங்கலம் ஜஹாங்கீர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை