மேலும் செய்திகள்
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
24-Dec-2025
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்-பட்டது. முதல்கட்டமாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. திறப்பு படிப்-படியாக உயர்த்தப்பட்டு, 2,300 கன அடி வரை அதிகரிக்கப்படும் என, நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர் திறப்பின் மூலம், கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில், ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நேற்று அணை நீர்மட்டம், 97.08 அடி, நீர் இருப்பு, 26.5 டி.எம்.சி., யாக இருந்தது. அணை நீர்வரத்து, 114 கன அடியாக இருந்தது.
24-Dec-2025