மேலும் செய்திகள்
பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
07-Aug-2025
பவானிசாகர், பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை - தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 300 கன அடி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதேசமயம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 950 கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என, 3,350 கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம், 101.40 அடி; இருப்பு, 29.8 டி.எம்.சி.,; நீர்வரத்து, 1,546 கன அடியாக இருந்தது.
07-Aug-2025