உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு விழா-

வேளாளர் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு விழா-

ஈரோடு :ஈரோட்டை அடுத்த திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நேரலை இசை நிகழ்ச்சி வழங்கினார். நிகழ்ச்சிகளை விஜய் டி.வி., தொகுப்பாளர் பரினா ஆசாத் தொகுத்து வழங்கினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்து பேசினார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, கல்லுாரி முதல்வர், நிர்வாக மேலாளர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி