உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு

சாதா விசைத்தறி மேம்பாட்டு மானிய ஒதுக்கீடுக்கு வரவேற்பு

ஈரோடு: விசைத்தறி மேம்பாட்டு மானிய நிதி, 30 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்ததை, தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்ட-மைப்பு அமைப்பாளர் சுப்பிரமணியம், முதல்வருக்கு வரவேற்பு தெரிவித்து கடிதம் அனுப்பினார்.கடிதத்தில் கூறியதாவது: சாதா விசைத்தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக 'டக் இன்' உடன் மாற்றம் செய்ய, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆகும் செலவில், 1.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்க கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று, 1 லட்சம் ரூபாய் மானியமாக அரசு ஒதுக்கீடு செய்து, 30 கோடி ரூபாய் மானிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் மின் கட்டண உயர்வில் விசைத்தறிகளுக்கு விலக்க-ளித்து, இலவச மின்சாரம், 750 யூனிட்டை, 1,000 யூனிட்டாக உயர்த்தியதும் உதவி வருகிறது. விசைத்தறிகளை நவீனப்ப-டுத்தும் பேனல் போர்டு திட்டத்துக்கு, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததும், நெசவாளர் வாழ்வு மேம்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை