உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

ஈரோடு, ஈரோடு, மாணிக்கம்பாளையம் மகாகவி பாரதியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் மனைவி சண்முக பிரியா, 37. மகன், மகளுடன் வசித்தனர். சண்முகம் அதிகளவில் கடன் வாங்கினார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 27 காலையில் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. யாரிடமும் பேசாமல் இருந்த சண்முக பிரியா, திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. மனைவியை காணவில்லை என, சண்முகம் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை