உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பொறி அச்சத்தால் மின் கம்பத்தில் இருந்து விழுந்த ஒயர்மேன் பலி

தீப்பொறி அச்சத்தால் மின் கம்பத்தில் இருந்து விழுந்த ஒயர்மேன் பலி

ஆத்துார், ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48. ஆத்துார் மின்வாரிய அலுவலகத்தில், ஒயர்மேனாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு, ஆத்துார், கண்ணாடி மில் பகுதியில் உள்ள இரு வழி உயர் அழுத்த பாதை மின் கம்பத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டார். அப்போது ஒயர்களில் இருந்து தீப்பொறி ஏற்பட்டதால், அந்த அச்சத்தில் சக்திவேல் விழுந்தார். அதில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !