உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி

கம்பத்தில் இருந்து தவறிவிழுந்த ஒயர்மேன் பலிகோபி, ஜன. 3-கொளப்பலுார் அருகே திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 53; கெட்டிச்செவியூர் மின்வாரிய அலுவலக ஒயர்மேன். அதே பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்பு கோளாறை சரிசெய்வதற்காக நேற்று காலை, 11:30 மணிக்கு மின் கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்தில் பலியானார். சிறுவலுார் போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வெள்ளியங்கிரிக்கு மனைவி கிருஷ்ணவேணி, 48; ஒரு மகன், மகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !