உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் முனிசிபல் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பத்மா, 53; டெய்லர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 2016ல் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த பிரச்னையில் பத்மாவுக்கு தொடர்பு இருந்தது.இந்த வழக்கு விசாரணைக்காக ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று காலை வந்தார். வளாகத்துக்கு வெளியே, 11:20 மணியளவில் நின்றிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை