உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, குழந்தையுடன் பெண் மாயமானார்.சத்தியமங்கலம் அடுத்த, கடம்பூர் மலைப் பகுதி ஒசப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 24, கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி அமுதா, 20. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் சத்தியமங்கலம் கரட்டூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் தங்கி, கரும்பு வெட்டும் பணி செய்து வந்தனர். கடந்த, 25ம் தேதி அமுதா குழந்தையுடன் வங்கி பாஸ் புத்தகம் எடுப்பதற்காக, சொந்த ஊரான ராமாபுரத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. காணாமல் போன மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில், நேற்று முன்தினம் அய்யப்பன் புகாரளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை