உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு /  பெண் குழந்தை விற்பனை; பவானியில் தொழிலாளி கைது

 பெண் குழந்தை விற்பனை; பவானியில் தொழிலாளி கைது

பவானி: ஈரோடு மாவட்டம், பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் மீன் மார்க்கெட் அருகில் வசிப்பவர் பிரவீன்குமார், 32; கூலி தொழிலாளி. மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். பிரவீன்குமார் வீட்டில் இருந்து நேற்று பச்சிளம் குழந்தை அழுகுரல் கேட்டது. அப்பகுதி மக்கள் தகவலில், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள், பவானி போலீசாருடன் சென்று, பிறந்து சில நாட்களேயான, பெண் குழந்தையை மீட்டனர். பிரவீன்குமாரை பவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், விற்பனைக்காக, மும்பையில் இரு பெண்களிடம் குழந்தையை விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர்கள் யார் என்பது குறித்து, பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ