உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளி கை கட் துாய்மை பணியாளர்கள் இரவில் ஆர்ப்பாட்டம்

ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளி கை கட் துாய்மை பணியாளர்கள் இரவில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், இரண்டாவது பிளாட்பார்மில் இருந்து, சென்னை-மங்களூரு ரயில் நேற்றிரவு, 8:30 மணிக்கு புறப்பட்டது.அப்போது ஒரு பெட்டியில் துாய்மை பணி மேற்கொண்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன துாய்மை பணியாளர் தனஞ்செய் குமார், 35, ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது, ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையே உள்ள பகுதியில் விழுந்தார். இதில் அவரது கை துண்டானது. உடனடியாக மீட்டு மருத்துவ முதலுதவி அளிக்க ஸ்டேஷனில் எவ்வித வசதியும் இல்லை. இதனால் நீண்ட நேரம் காயத்துடன் ஸ்டேஷனிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே லக்கேஜ் எடுத்து செல்லும் தள்ளுவண்டியில் ஏற்றி ஸ்டேஷன் முன்புறம் கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தர்ணாவில் இறங்கிய ஊழியர்இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் மருத்துவ குழு அமைக்க வேண்டும். உரிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க கோரி, தனியார் நிறுவன துாய்மை பணியாளர்கள், நிலைய அதிகாரி அறை முன் அமர்ந்து, 50 நிமிடங்களாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஸ்டேஷனுக்கு உறவினரை வழியனுப்ப வந்த, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன் இதையறிந்து, தொழிலாளர்களின் தர்ணாவில், அவரும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்