பவானிசாகர் அணை விநாயகருக்கு 1,008 தீர்த்தக்குடம் ஊற்றி வழிபாடு
பவானிசாகர், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகள், பவானிசாகர் அணை மேல் பகுதியில் உள்ள சாகர் சக்தி விநாயகர் கோவிலுக்கு, 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்றனர். அணை நீர்த்தேக்க பகுதியில் இருந்து, 1,008 குடம் தண்ணீர் எடுத்துச்சென்று, விநாயருக்கு ஊற்றி வழிபாடு நடத்தினர்.