உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்

இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்

ஈரோடு;மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வரலாறு காணாத வேலையின்மை, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஒரு கோடி மக்கள் சந்திப்பு என்ற பிரசார இயக்கம், ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் நேற்று நடந்தது.இ.கம்யூ., வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இ.கம்யூ., தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரமணி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ