உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் சாவு

பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் சாவு

பவானி, ஜன. 2-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேமன்காட்டுவலசை சேர்ந்த தங்கராஜ் மகன் முருகேசன், 31, கூலி தொழிலாளி. இவரும், குமாரபாளையம் தட்டான்குட்டையை சேர்ந்த நண்பரான அங்கமுத்து மகன் நடராஜ், 31, ஆகியோர் நேற்று குமாரபாளையத்திலிருந்து, ராயல் என்பீல்ட் பைக்கில் ஈரோடு நோக்கி சென்றனர். பவானி அடுத்த பெரியபுலியூர் ஜீவாநகரை சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்தி, 30, அவரது நண்பர் கிரி ஆகியோர் அப்பாச்சி பைக்கில் ஈரோட்டிலிருந்து வந்து கொண்டிருந்தனர். இரவு 7:00 மணிக்கு பவானி அருகே பெருமாள்மலை என்ற இடத்தில் வந்தபோது, இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில், குமாரபாளையத்தை சேர்ந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.சித்தோடு போலீசார், முருகேசனின் பிரேதத்தை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மூவரும், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை