உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டர் சட்டத்தில் வாலிபருக்கு சிறை

குண்டர் சட்டத்தில் வாலிபருக்கு சிறை

ஈரோடு, ஈரோடு, ஓடைப்பள்ளம் ஜீவானந்தம் சாலையை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ், 23. இவரை, சில தினங்களுக்கு முன் கஞ்சா விற்றதாக கூறி, டவுன் போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர் மீது ஈரோடு டவுன், சூரம்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என, எஸ்.பி.,மூலம் ஈரோடு டவுன் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து, முகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று, கோபியில் உள்ள சிறையில் இருந்து அழைத்து சென்று, கோவை மத்திய சிறையில் டவுன் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை