உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.10.95 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.10.95 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 10.95 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கமிட்டிக்கு, மக்காச்சோளம் 120 மூட்டை, எள் 65, வேர்க்கடலை 30, தலா ஒரு மூட்டை உளுந்து, துவரை உட்பட 217 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,638 ரூபாய்க்கும், எள் 9,304, வேர்க்கடலை 7,199, உளுந்து 9,009, துவரை 3,639 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 10 லட்சத்து 95 ஆயிரத்து 519 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 6, எள் 2 என மொத்தம் 8 மூட்டை விளைப்பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,550, எள் 6,599 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 23 ஆயிரத்து 825க்கு வர்த்தகம் நடந்தது.தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 15, எள் 4, உளுந்து 1 என மொத்தம் 20 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை நெல் 2,100, எள் 8,500, உளுந்து 8,189 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ. 68 ஆயிரத்து 989க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை