உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது

பா.ஜ., ஆர்ப்பாட்டம் 161 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 161 பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து, தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜேஷ், சிறுபான்மை அணி மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.,வினர் 161 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை