உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் 1.64 செ.மீ., மழை

மாவட்டத்தில் 1.64 செ.மீ., மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 1.64 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை பரவலாக மழை பெய்தது.அதன்படி, (மி.மீ., அளவில்) கள்ளக்குறிச்சி- 12 மி.மீ., தியாகதுருகம் 24, கச்சிராயபாளையம் 22, கோமுகி அணை 23, மூரார்பாளையம் 5, வடசிறுவள்ளூர் 8, கடுவனுார் 6, மூங்கில்துறைப்பட்டு 34, அரியலுார் 25, ரிஷிவந்தியம் 4, கீழ்பாடி 6, கலையநல்லுார் 29, மணலுார்பேட்டை 20, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 10, வாணாபுரம் 26, திருக்கோவிலுார் (வடக்கு) 28, திருப்பாலபந்தல் 13, வேங்கூர் 25, பிள்ளையார்குப்பம் 15, எறையூர் 39, உ.கீரனுார் 21 என 395 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.64 செ.மீ., மழை பதிவாகியது.

மின்னல் தாக்கி பசுமாடு இறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் திருக்கோவிலுார் அடுத்த நெமிலி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் கருப்பன் மகன் சேகர் என்பவரது பசுமாடு உயிரிழந்தது.அதேபோல், வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூரை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் செங்கோல் என்பவரது கூரை வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்