உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,850 கிலோ வெல்லம் பறிமுதல்

சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,850 கிலோ வெல்லம் பறிமுதல்

கச்சிராயபாளையம், ;கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்ச பதுக்கப்பட்ட1, 850 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கல்வராயன் மலையில் உள்ள வராம், கெடார் உள்ளிட்ட கிராமங்களில், கரியாலுார் போலீசார் நேற்று காலை சாராய சோதனை செய்தனர். அப்போது வராமை சேர்ந்த, சடையன் மகன் ஏழுமலை, 40; என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் சாக்கு மூட்டைகளில், சாராயம் காய்ச்ச 1,850 கிலோ நாட்டு வெல்லம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை உடனடியாக பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய, ஏழுமலையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை