மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வெவ்வேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த மோதிலால்காந்தி,35; குமரவேல்,36; எஸ்.ஒகையூரை சேர்ந்த ஆறுமுகம்,46; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள், ரூ.480 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், விற்பனைக்காக மதுபாட்டில்களை எடுத்து சென்ற தென்கீரனுாரை சேர்ந்த கோவிந்தன்,57; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.