உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ.42 லட்சம் வர்த்தகம்

அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ.42 லட்சம் வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் ரூ. 42 லட்சம் வர்த்தகமானது.விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் வரத்து உள்ள கமிட்டியில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அறுவடை குறைந்து இருந்தாலும், மக்காச் சோளம், நெல், மணிலா உள்ளிட்ட விளை பொருட்களை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.எனினும் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் விலை ஏற்றம் பெறவில்லை. மாறாக கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த எள்ளின் விலை மூட்டைக்கு மூன்றாயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேபோல் மக்காச்சோளத்தின் விளையும் நேற்று சராசரியாக மூட்டை ரூ. 2656க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது மூட்டைக்கு ரூ. 200 வரை குறைவு.நேற்று 134.6 மெட்ரிக் டன் அளவிற்கு விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. மணிலா 250 முட்டை, நெல் 1200 மூட்டை, மக்காச்சோளம் 150 மூட்டை. இதன் மூலம் ரூ.42.13 லட்சம் வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை