உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாணாபுரத்தில் ரூ.3.95 கோடியில் பி.டி.ஓ., அலுவலகம் திறப்பு விழா

வாணாபுரத்தில் ரூ.3.95 கோடியில் பி.டி.ஓ., அலுவலகம் திறப்பு விழா

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் ரூ.3.95 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பி.டி.ஓ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பி.டி.ஒ.,, அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் கட்டட பெயர்பலகையை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினர்.ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். எம்.பி., மலையரசன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் செல்வகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் அமிர்தம் ராஜேந்திரன், கோவிந்தராஜ், ராஜேந்திரன். தாசில்தார் பாலகுரு, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி தலைவர்கள் தீபா அய்யனார், கிருஷ்ணபிரசாத், முத்துசாமி, வசந்தகுமாரி லிங்கநாதன், கோமதி சுரேஷ், கீதா சுகுமாறன், ராமமூர்த்தி, பி.டி.ஓ., கொளஞ்சிவேல், துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில்குமார், சுதாகர். தி.மு.க., நிர்வாகிகள் ராஜி, ராஜிவ்காந்தி, சுந்தர்ராஜன் உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், அரசு அலுவலர்கள், உட்பட பலர் பங்கேற்றனர்.பி.டி.ஓ., நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை