| ADDED : ஜூன் 11, 2024 09:17 PM
உளுந்துார்பேட்டை:திருநாவலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 57 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் அடுத்த தொப்பையாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. வி.ஏ.ஓ.,வான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி ராஜாமணி, 70; தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த 57 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும். இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, வீடு புகுந்து கொள்ளைடியத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.