உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் 8 தலைமை காவலர்கள் 2ம் முறையாக பணியிட மாற்றம்

மாவட்டத்தில் 8 தலைமை காவலர்கள் 2ம் முறையாக பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெவ்வேறு காவல் நிலையங்களில் 8 தலைமைக் காவலர்களை, ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தேவி, திருப்பாலபந்தலில் பணிபுரிந்த யசோதா ஆகிய இருவரும் திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோல், கள்ளக்குறிச்சி சுரேஷ், வடபொன்பரப்பி செல்வம் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆர்.மாலா, பி.மாலா, நெடுஞ்சாலை ரோந்து-3ல் பணிபுரிந்த இளையராஜா ஆகிய மூவரும் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்த அருள்மொழி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள் 8 பேரும் கடந்த 9ம் தேதி வெவ்வேரு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வெவ்வேறு இடத்திற்கு மாற்றம் செய்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை