உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவிக்கு கத்திக்குத்து கணவருக்கு வலை

மனைவிக்கு கத்திக்குத்து கணவருக்கு வலை

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி தேன்மொழி, 37; இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தேன்மொழி கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது தாய் வீடான விழுப்புரம் அடுத்த காணை கிராமத்திற்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் கோவிந்தன், காணைக்குச் சென்று மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், மனைவி தேன்மொழியை கத்தியால் வயிற்று பகுதியில் குத்தினார்.படுகாயமடைந்த தேன்மொழி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ