| ADDED : ஆக 23, 2024 12:55 AM
வடலுார்: உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த, 5 மாத குழந்தையை கொலை செய்து சாக்கடையில் வீசிவிட்டு, கணவர் கடத்திச் சென்றதாக நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுநாகலுாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் மணிராஜா, 24; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி, 21; திருமணமாகி 4 ஆண்டாகும் இவர்களுக்கு ராதிகா, 3; மற்றும் 5 மாத குழந்தை லாவண்யா என இரு குழந்தைகள் இருந்தனர்.கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ராஜேஸ்வரி கடந்த 4 மாதங்களாக, வடலுார் சந்தைதோப்பில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி கடை வீதிக்கு சென்றபோது தன்னிடம் இருந்த 5 மாத குழந்தையை, கணவர் மணிராஜா கடத்திச் சென்று விட்டதாகவும், குழந்தையை மீட்டுத் தருமாறும், வடலுார் போலீசில் புகார் செய்தார். சந்தேகமடைந்த போலீசார், ராஜேஸ்வரியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், குழந்தையின் காதில் சீழ் வந்ததால், மருந்து போட்டதும் குழந்தை இறந்துவிட்டது. அதனால், குழந்தையை சாக்கடையில் வீசியதாக கூறினார். அதன்பேரில் போலீசார், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் ராஜேஸ்வரி மற்றும் மணிராஜா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜேஸ்வரிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருந்ததும், உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையின் மூக்கை அழுத்தி கொலை செய்து, சாக்கடையில் வீசிவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.அதையடுத்து, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், கொலை வழக்கு பதிந்து ராஜேஸ்வரியை கைது செய்தனர்.