உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்

காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஆடி பூர விழா நடந்தது.காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள், மகாலட்சுமி தாயார் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.மகா தீபாராதனைக்கு பின் 108 சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட், வளையல், மஞ்சள், குங்குமம், தாலி சரடு உள்ளிட்ட மங்கள பொருட்களை கோவில் தர்மகர்த்தா வெங்கடேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்