உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பார்த்தீனியம் செடியை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

பார்த்தீனியம் செடியை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

தியாகதுருகம், : பயிர் மகசூலை பாதிக்கும் பார்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அன்பழகன் செய்திக்குறிப்பு:பார்த்தீனியம் களைச்செடிகள் மிக எளிதாக பரவி வளர்ந்து மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷச் செடியாகும். இவை தோல் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. ஒரு செடியில் இருந்து 25 ஆயிரம் விதைகள் வரை உற்பத்தியாகி நிலத்தில் விழுந்து முளைத்து வேகமாக பரவுகிறது. இது மழை, வறட்சி என அனைத்து சூழ்நிலையும் தாங்கி செழித்து வளரும் தன்மையுடையது. இதிலிருந்து வெளிப்படும் ஒரு வகை ரசாயனம் இதன் அருகில் பிற செடிகளை வளர விடாமல் தடுக்கிறது.இதனால் பயிர் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பார்த்தீனியம் களைச் செடிகளை கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. எனவே, ஒருங்கிணைந்த நிர்வாக முறைகளை பின்பற்ற வேண்டும். கையுறைகள் அல்லது பாலித்தீன் பைகளை அணிந்து கொண்டு பார்த்தீனியம் செடிகளை பூக்கும் பருவத்திற்கு முன் வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். மேலும் ரசாயன முறையில் கட்டுப்படுத்த களைக் கொல்லிகளை தெளிக்கலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ அட்ரசின் களைக்கொல்லியை தெளிப்பதன் மூலமும், ஒரு லிட்டர் தண்ணீரில் 8 கிராம் சோடியம் உப்பு கலந்து பயிரிடப்படாத நிலங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகள் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம். இச்செடிகள் பூக்கும் பருவத்தில் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் மெட்ரிபூசன் 3 கிராம் கலந்து தெளிப்பதன் மூலம் அவற்றை அழிக்க முடியும். மேற்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்தி பார்த்தீனியம் விஷ செடிகளை அழித்து பயிர் மகசூலை விவசாயிகள் பெருக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை