உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓடுதள பாதையில் பயிற்சி பெற விமானப்படை வீரர்கள் வருகை

ஓடுதள பாதையில் பயிற்சி பெற விமானப்படை வீரர்கள் வருகை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே விமானப்படை ஓடுதள பாதையில் பயிற்சி பெறுவதற்காக தஞ்சாவூரிலிருந்து விமானப்படை வீரர்கள் வருகை புரிந்துள்ளனர். உளுந்துார்பேட்டை தாலுகா, மதியனுார் அடுத்த 4 கிராம எல்லைகளைக் கொண்டு இரண்டாம் உலக போரின்போது ராணுவ விமான ஓடுதள பாதை அமைக்கப்பட்டது. இந்த விமான ஓடுதள பாதை பயன்பாடியின்றி இருந்தது.இதனால் இந்த விமான ஓடுதள பாதை அருகே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து சேதப்படுத்தி இருந்தனர். எந்த பயன்பாடும் இன்றி, இருந்து வந்த விமான ஓடுதள பகுதிக்கு நேற்று மாலை 6:00 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து விமானப்படை வீரர்கள் 50 பேர் பயிற்சி பெறுவதற்காக வருகை புரிந்தனர். இவர்கள் 15 நாட்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி