உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவிக்கு பாராட்டு விழா

மாணவிக்கு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சி : வாரியத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த முருகா பாலிடெக்னிக் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வாரியத்தேர்வில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயின்ற மாணவி தனலட்சுமி 600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த கல்லுாரி விரிவுரையாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவி தனலட்சுமிக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.கல்லுாரி தாளாளர் ரகமதுல்லா, தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக் ஷ், முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை