மேலும் செய்திகள்
உளுந்து விலை 'திடீர்' சரிவு; விவசாயிகள் கலக்கம்
06-Feb-2025
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 1.62 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து தொடர்ந்து சீரான அளவில் இருந்து வருகிறது. நேற்று 1000 மூட்டை மக்காச்சோளம், 4,000 மூட்டை நெல், 600, உளுந்து என மொத்தம் 487 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது.இதன் மூலம் 1.62 கோடி ரூபாய்க்க வர்த்தகமானது. மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் வரத்து தினசரி 500 மூட்டையிலிருந்து 1000 முட்டை வரை உள்ளது. இன்று 4ம் தேதி மேல்மலையனுார் திருவிழா காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், கமிட்டிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை 5ம் தேதி வழக்கம்போல் கமிட்டி நடைபெறும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
06-Feb-2025