உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

ரிஷிவந்தியம் : நுாரோலையில் கோவில் திருவிழாவில் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என கூறி, ஒருவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் குருசாமி,55; இவர் அதே கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் சீரியல் லைட்டுகளை கட்டியுள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்,30; என்பவர் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என தெரிவித்து, டியூப் லைட்டுகளை உடைத்ததுடன், குருசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து ரகோத்தினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை