உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஓட்டு போட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன சங்கத் தலைவர் திருவேங்கடம் வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை குமாரி வரவேற்றார்.நிகழ்ச்சியில், ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரிமா சங்கமாவட்ட தலைவர் ராஜா, நெடுஞ்செழியன், பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரசேகர் பேசினர்.பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கு லோக்சபா தேர்தலில் எந்தவித அன்பளிப்பையும் எதிர்பாராமல் ஓட்டளித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டியதன் அவசியம் பற்றிய வாசகம் அடங்கிய தபால் கார்டை விலாசமுடன் எழுதி அனுப்பினர். வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை