உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்கள் நலனில் பங்காரம் லட்சுமி கல்லுாரி

மாணவர்கள் நலனில் பங்காரம் லட்சுமி கல்லுாரி

கள்ளக்குறிச்சி : மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாட பிரிவுகளுடன் பங்காரம் லட்சுமி கல்லுாரி சிறப்புடன் இயங்கி வருகிறது.இது குறித்து கல்லுாரி தலைவர் மணவண்ணன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லட்சுமி கல்வி நிறுவனம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கிராமப்புற மாணவர்களும் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பங்காரத்தில் லட்சுமி ஹயகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது. மாணவர்கள் விரும்பும் வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாடப் பிரிவுகளை கொண்டு லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., எம்.பில்., உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பிற்கு உதவிடும் வகையிலான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இக்கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு கோகோ, கபடி, செஸ், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு பஸ் கட்டணம் இலவசமாக வழங்கப் படுகிறது.தற்போது 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை