உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாவளம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பாவளம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம், : சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.இக்கோவில் தேர் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மேலும் சாகை வார்தல், திருக்கல்யாண உற்சவம், கழுமரம் ஏறுதல், தீமிதி திருவிழா நடந்தது.முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை